புவனகிரி அருகே பெருவரப்பூர் கிராம பகுதியில் வேப்ப மரத்தில் இருந்து வெள்ளை நிற திரவம் வடிவதால் பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வழிபாடும் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெருவரப்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வயல்வெளி பகுதியில் ஒரு வேப்ப மரத்தின் மேல் தண்டு பகுதியில் இருந்து திடீரென வெள்ளை நிற திரவம் வெளியேறி வழிந்து தரையில் கொட்டியது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதாக கருதி அங்கு சென்று உடனடியாக மஞ்சள் நிற ஆடையை வேப்ப மரத்திற்கு கட்டி வழிபாடும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தொடர்ந்து வெள்ளை நிற திரவம் வெளியேறி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இதில் அம்மன் குடி கொண்டுள்ளதாக கருதி தொடர்ந்து வழிபாடுகள் செய்து வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் பலரும் கிராமத்திலிருந்து வயல்வெளி பகுதியில் வேப்பமரம் உள்ள சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அந்த வேப்பமரத்தை பார்த்து வழிபாடும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments