Breaking News

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.


ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதவை திரும்ப பெற தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும், தமிழ்நாடு-புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது, தமிழ்நாடு-புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில், பொருளாளர் கிதர்பிஸ்மி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு விவாதத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 


இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு முழுமையாக புறக்கணித்து திருப்பி அனுப்ப வேண்டும். இந்த மசோதா இஸ்லாமிய மக்களை பாதிக்க கூடியதாக உள்ளது. ஆகையால் ஒன்றிய அரசு வக்பு சட்ட திருத்த மசோதா 2024-ஐ திரும்ப பெற மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!