Breaking News

விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி முதலாவது ஆண்டு துவக்க விழா.


காரைக்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான (2024-2025) கல்லூரியின் முதலாவது ஆண்டு துவக்க விழா விமரிசையாக நடை பெற்றது. 

இதில் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் Dr. சி.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் துணை முதல்வர் Dr. விஜயகுமார் நாயர்  கல்வியின் முக்கியத்துவத்தையும், ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் பல்வேறு துறைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். 


மேலும் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ் துறை இயக்குநர், எம்.பி.வெங்கடேசன், மாணவர்களையும், பெற்றோர்களையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினர். மருத்துவத் துறை மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் தங்களது துறைகள் எவ்வகையில் ஆலீடு ஹெல்த் சயின்சஸ் மாணவ, மாணவியர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்பதை சிறப்பாக விளக்கினார். அலைடு ஹெல்த் சயின்சஸ் பல்வேறு துறைகள், எப்படி படிக்க வேண்டும் என்பதையும் விளக்கினர். அலைடு ஹெல்த் சயின்ஸீல் படித்தால் எளிதாக வேலை கிடைக்கும் என்பதையும் விளக்கி பேசினர்.

No comments

Copying is disabled on this page!