பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் 52 ஆவது ஆண்டு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனரும் செயலாளருமான பொன்ராஜ் மற்றும் துணைச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கூட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் வரதராஜன், அய்யாதுரை அனைவரையும் வரவேற்றார் துணைச் செயலாளர்கள் வேல்சாமி , தங்கப் பூ, மற்றும் தேசிய நடுவர் காளிதாஸ், சரவணன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் 1973 ஆம் ஆண்டு துவங்கிய பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தொடர்ந்து 52 வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் ஹாக்கி போட்டி வருகிற டிசம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1982 முதல் பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக ஹாக்கி போட்டி நடத்துவதற்கு ஆதரவு அளித்து வரும் கே ஆர் கல்வி குழுமத்திற்கும் கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் ஹாக்கி அகடமி மூலமாக ஏழை எளிய இளம் வீரர்கள் ஹாக்கி விளையாடி பயன் பெற்று வருகிறார்கள் அதன் நிறுவனர் கல்வித் தந்தை கே ராமசாமி தாளாளர் கே ஆர் அருணாச்சலம் அவர்களுக்கு பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கோவில்பட்டியில் தேசிய ஹாக்கி போட்டி, அகில இந்தியா ஆக்கி போட்டி, மாநில சாம்பியன் போட்டி என பல போட்டிகள் நடத்தி தமிழகத்தின் ஹாக்கியின் தலைநகரமாக கோவில்பட்டியை உருவாக்கியிருக்கும் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.
No comments