Breaking News

திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகிறது.


திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை 27ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 20ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் தினமும் புதுச்சேரியில் இருந்து இரவு 9.30 மணிக்கும், அதேபோல் திருப்பதியில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்படுகிறது.

இதில் பயணம் செய்யும் பயணிகள் முன் பதிவு கட்டணத்துடன் சேர்த்து ரூ. 290 செலுத்த வேண்டும். பயணம் செய்ய விரும்பும் பயணிகள் புதுச்சேரி பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் பெற்று கொள்ளலாம். மேலும் பஸ் இண்டடியா செயலி வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இத்தகவலை பி.ஆர்.டி.சி., முன்பதிவு அலுவலகம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!