Breaking News

கம்பம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் கம்பத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.


தேனி மாவட்டம் கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருகின்ற எட்டாம் தேதி இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தனித்தனியாக விநாயகரை ஊர்வலம் நடைபெற உள்ளது விநாயகர் சித்தி விழா ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வண்ணம் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி நிர்வாகிகள் இடம் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று ஊர்வலம் செல்லும் பகுதியான கம்பம் அரசமரம் பழைய பஸ் ஸ்டாண்ட் மாரியம்மன் கோவில் வரதராஜபுரம் வ உ சி திடல் அரசு மருத்துவமனை உழவர் சந்தை நாட்டு கல் கம்மல் மெட்டுக்கள் ரோடு தங்க விநாயகர் கோவில் உத்தமபுரம் மெயின் ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு காந்திஜி வீதி வேலப்பர் கோவில் தெரு, காந்தி சிலை சுருளிப்பட்டி சாலை கொள்ளிடம் முக்கிய வீதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் செங்குட்டு வேலன் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் காரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது இது குறித்து போலீசார் குழுவில் ஊர்வலம் செல்லும் பகுதியில் வாகனம் செல்வதற்கு இடையூறாய் மின்கம்பிகள் மரக்கிளைகள் மற்றும் ஆட்கள் உள்ளன என்பது குறித்து கண்காணிப்பு பகுதியில் தேவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!