Breaking News

வாணியம்பாடி அருகே மகளிர் குழுக்கு 3 நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி கொடுத்து நூதன முறையில் 50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்து பெண் தலைமறவு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் வசிப்பவர் மார்த்தா (வயது 26) இவருடைய கணவர் உதயா, மார்த்தா என்ற பெண் அப்பகுதியில் உள்ள கூலி வேலை செய்யும் பெண்களிடம் மகளிர் குழு உருவாக்கி அதன் மூலம் லோன் வாங்கி தருவதாக ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி புத்தகம் ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு நிதி நிறுவனங்களில் லோன் பெற்று அந்த பணத்தை அவருடைய வங்கி கணக்கில் இருந்து 50 லட்சத்திற்கும் மேல் நூதன முறையில் மோசடி செய்து உள்ளதாக கூறப்படும் நிலையில் நிதி நிறுவனங்கள் லோன் கொடுத்தவர்கள் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் சென்று லோன் கட்ட  தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.


இந்நிலையில் மார்த்தா என்ற பெண் வீட்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டுள்ளனர். இருந்த போதிலும்  அடுத்த மாதம் கட்டுவதாக கூறி வந்த மார்த்தா திடீரென வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார்.

லோன் கொடுத்த நிறுவனங்களின் ஊழியர்கள் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று பெண்களிடம் தொந்தரவு செய்து வந்ததால் செய்வதென்று தெரியாமல் பெண்கள் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் லோன் பெறுவதற்காக திருமணம் ஆகாத பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் உடன் திருமணம் ஆனது போல் திருமண பத்திரிக்கை அடித்தும் ஒரு பெண்ணின் பெயரில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மார்த்தாவிடம் சென்று கேட்டபோது அவருடைய ஆதரவாளர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வேதனை தெரிவிக்கின்றார், அதேபோல் வயதான பெண்ணின் ஆதார் கார்டில் பத்து வயது குறைத்து போலியாக ஆதார் கார்டு தயார் செய்தும் லோன் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும் அதேபோன்று அப்பகுதியில் உள்ள பல பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்த்தா என்ற பெண் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர், அடுத்தடுத்து மார்த்தா என்ற பெண்  மீது புகார் வந்துள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதயேந்திரம் பகுதியில் மகளிர் குழு லோன் வாங்கி கொடுத்து ரூ 50 லட்சத்திற்கும் மேல் நூதன முறையில் மோசடி செய்து தலைமறைவாக உள்ள பெண் சிக்குவாரா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணம் கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என பாதிக்கப்பட்ட பெண்கள் புலம்பி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!