திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஒரு அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜர் தலைமை தங்கினார்.,மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மேரி வினோதினி,மாவட்ட இணை செயலாளர்கள் சுப்ரமணியன், சேரன், மாவட்ட துணை செயலாளர் வினைதீர்த்தான்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசாணை 24ன் படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்., சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் யுனைடெட் இந்தியா, எம்.டி இந்தியா காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்., அதிக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்., உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இதில் நிர்வாகிகள் வீரராகவன், அய்யம்மாள், ஏகாம்பரம், ராமமூர்த்தி, பலராமன், ஏழுமலை, பேராசிரியர் பிரபா. கல்விமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.
No comments