Breaking News

மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி மனு


மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு நடப்பாண்டு 91 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் ஏடிடி 16, ஆடுதுறை 43, ஜோதி, கோ 54 உள்ளிட்ட குறுகிய கால நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஜோதி ரக நெல் கொள்முதல் செய்யப்படாததால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனைசெய்ய வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இது குறித்து மறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவர் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில் மறையூர் கிராமத்தில் குறுவை சாகுபடியில் ஜோதி ரக நெல்லை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளோம். 


தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் கொள்முதல் நிலையத்தில் ஜோதி ரக நெல் கொள்முதல் செய்ய முடியாது என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். மோட்டா ரகம் என்று அதனை கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 


விவசாயிகள் சாகுபடி செய்கின்ற அனைத்து வகை நெல்லையும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Copying is disabled on this page!