திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி கைது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33).கூலி தொழிலாளி.திருமணம் ஆனவர்.இவர் 15 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது உள்ளே நுழைந்து பல முறை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதால் தற்போது நான்கு மாத கர்ப்பமாக மாணவி உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கிருபாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
No comments