உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை முன்பு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, பாதுகாப்பிற்க்காக கயிறு அடித்து இடம் அமைத்துக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் பாராட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேலம் சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகை தருகின்றனர். மேலும் புதன் கிழமை வாரச்சந்தையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம மக்கள் இங்கு தான் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றன, அதன் முன்பு சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து பாதிக்க படும் வகையில் கடைகளை வைத்திருந்தனர்.
இதனால் அங்கு தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் சிறு சிறு விபத்துக்களும் நடைபெறுவது வழக்கம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான , போக்குவரத்து உதவி ஆய்வாளர் அஷ்டமூர்த்தி மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடனடியாக விரைந்து ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றியும், மேலும் வியாபாரிகளின் தொழிலும் பாதிக்கபடாதவாறு அவர்கள் பாதுகாப்பாக கடை வைக்க கயிறு கட்டி வழி அமைத்து கொடுத்தனர், போக்குவரத்து காவல்துறையின் இச்செயலால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments