Breaking News

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.


தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்களிடம்  போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு குறித்தும் காவல் உதவி செயலி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


அதன்படி தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். 


போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பதாகைகள் ஏந்தியவாறு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி பள்ளியில் இருந்து துவங்கி திரேஸ்புரம் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது.

No comments

Copying is disabled on this page!