நாட்றம்பள்ளி தாலுக்கா சந்திரபுரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர். ஜவஹர்லால் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு 166 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 90 பயனாளிகளுக்கு இ,பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பெட்டகம் , மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த நல திட்ட உதவி வழங்கினார்.
உடன் கோட்டாட்சியர் ராஜசேகரன் ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, ராஜேந்திரன் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments