Breaking News

புதுச்சேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் 27 தங்கும் விடுதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.


புதுச்சேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் 27 தங்கும் விடுதிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கும் அனுமதி பெறவில்லை எனில் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில தங்கும் விடுதிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக புதுச்சேரி நகராட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுசம்பந்தமாக புதுச்சேரி கிழக்கு எஸ்.பி.,யிடம் இருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வுகள் அடிப்படையில், புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் செயல்படும் 27 விடுதிகளை கண்டறியப்பட்டுள்ளது.


இவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையின் முதல்படியாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு, 7 நாட்கள் காலக்கெடுவுடன் நோட்டீஸ் அனுப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக காலக்கெடு முடிவடைந்தவுடன், அனுமதி பெறாமல் இயங்கும் அனைத்து தங்கும் விடுதிகளுக்கும் உடனடியாக புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடவடிக்கையில் மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!