இந்தியாவே வியக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாடுகள் உள்ளது சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் பொதுக்கூட்டத்தில் பெருமிதம்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி மேற்கு ஒன்றியங்களில் ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரா, மற்றும் கிருஷ்ணண் ஏற்பாட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரன் பேசுகையில் இந்தியாவே வியக்கும் அளவிற்கு முதலமைச்சர் அவர்களின் திட்டங்களும் அவருடைய செயல்பாடுகளும் முதன்மையாக உள்ளது எனவும், திராவிட மாடல் அரசின் திட்டங்களை பொதுமக்களிடத்தில் அதிக அளவில் தெரிவிக்கும் விதமாக திண்ணை பிரச்சாரம் செய்யவேண்டும் எனவும், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் இளைஞரணியை புதியதாக சேர்ப்பதற்கும் மற்றும் தலைமை கழகத்தினால் அறிவிக்கப்படும் அனைத்து பணிகளுக்கும் அயராது உழைத்திடவேண்டும், என பல்வேறு ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமினை சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இளைஞர்கள் ஏராளமானோர் ஆர்வத்தோடு புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments