Breaking News

M.K தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை பிறப்பிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது.


தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் M.K தியாகராஜா பாகவதர் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்த விழாவானது தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்தும் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


அதனை தொடர்ந்து விழாவில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசளித்து பாராட்டி பரிசு தொகை வழங்கப்பட்டது.மேலும் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தில் 21-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்கான பாடுபடும் சமுதாய தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன்:- தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும் அதனை கைவினையாளர்கள் நல வாரியம் என மாற்ற வேண்டும் எனவும் தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தவில்லை எனவும் அதன் தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


தொழிலில் வறுமையில் இருப்பதால் தமிழக அரசு மானிய வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

No comments

Copying is disabled on this page!