புதுச்சேரி உள்துறை அமைச்சரின் பிறந்தநாளை ஒட்டி விழிதியூரில் ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் போர்வை வழங்கப்பட்டது.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் இன்று காரைக்கால் வந்திருந்த அமைச்சரை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகினர். இதன் ஒரு பகுதியாக விழிதியூரில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.என்.பழனி ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சேலை மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக அமைச்சரை மலர் தூவி வரவேற்று, மாலை மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், பட்டியலினி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பாஜக மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments