மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றி பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் விழிப்புணர்வு கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ. யு சந்திரகலா அவர்கள் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து பத்திரிகை ஊடகவியலாளருக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் குரலாகவும் சமுதாயத்தின் தூண்கள் போன்று செயல்படுகின்ற பத்திரிகை துறையினர் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், பத்திரிகை ஊடகவியலாளர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்ன. மக்களின் தேவைகள் என்ன. சமுதாயத்தில் என்ன பிரச்சனைகள் நடக்கின்றது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன, ஆகவே பொதுமக்களின் குரலாகவும் சமுதாயத்தின் தூண் போன்று செயல்படுகின்ற பத்திரிகை துறையினர் பெண் குழந்தைகளை பாதுகாப்பதிலும் பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என பேசினார்.
இந்நிகழ்ச்சியில். மாவட்ட சமூக நலன் அலுவலர் வசந்தி ஆனந்த் (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரலேகா பயிற்சி சட்ட உதவி, சமரச மையம் குழு வழக்கறிஞர் சங்கரன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை உதவி திட்ட அலுவலர் கோமதி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி மற்றும் பலர். பங்கேற்றனர்.
No comments