சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் நடைபெறும் பணிகளை எம்.எல்.ஏ நாஜிம் ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஹிலுருப்பள்ளி குளம் தூர்வாரும் பணி மற்றும் வள்ளல் சீதக்காதி வீதியில் புதிய பூங்கா அமைக்கும் பணி சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.எம்.எச்.நாஜிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
No comments