இமானுவேல் சேகரன் குருபூஜை விழா, 4 வட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி 4 தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், சமுதாயப் மக்களும் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் மாணவ மாணவிகளின் நலன் கருதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகா குட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கும், கீழடியில் செயல்பட்டு வரும் அருங்காட்சியத்திற்கும் விடுமுறை அளித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு பதிலாக வரும் 21ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்கள் இயங்கிடவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
No comments