கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ் மாணவர் மன்றம் விரைவில் தொடங்குவது குறித்தும் மாணவர் அணியின் ஆக்கப் பணிகள் குறித்தும், திமுக அரசு மாணவர்களுக்கு செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், மாணவர்களிடத்தில் எடுத்து கூறி சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழ். கா, அமுதரசன், சேலம் தமிழரசன், ஈரோடு வீரமணி, ஆகியோர் முன்னிலை வகித்து நேர்காணலை நடத்தி உரையாற்றினார்,
மேலும் மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான அங்கயற்கண்ணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்தோடு நேர்காணலில் கலந்து கொண்டனர், இறுதியாக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கு.குருராஜ் அவர்கள் நன்றி கூறினார்.
No comments