செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தேசிய பெண்கள் செஸ் போட்டி, பள்ளித் தலைவர் எஸ்.பி குமரேசன் தகவல்.
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்சிஇபள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் செஸ் போட்டி நடத்தப்பட உள்ளது என பள்ளி சேர்மன் எஸ் பி குமரேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்சிஇபள்ளியில் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது தற்போது தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட்டது.
செஸ் போட்டிகளை பொருத்தவரை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டில் செஸ் பாப்புலர் விளையாட்டாக மாறிவிட்டது தற்போது செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சார்பில் அகில இந்திய மாநில மாவட்ட செஸ் அசோசியேசனுடன் இணைந்து தேசிய அளவிலான பெண்கள் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
வரும் அக்டோபர் 3ம்தேதி முதல் 13-ம் தேதி வரை இப்போட்டிகள்நடத்தப்பட உள்ளது இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை பரிசு வழங்கப்பட உள்ளது மாணவர்களை ஊக்கப்படுத்தவே இது போன்ற போட்டிகள் பள்ளியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது தற்போது நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியின் போது எங்கள் பள்ளி மாணவர்களுடன் விளையாட விருப்பம் உள்ளவர்கள் விளையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவிலான செஸ் வீரர்கள் உருவாக்குவதே எங்கள் லட்சியம் என்றார், மற்றும் பள்ளி துணைத் தலைவர் அருண் வாழ்த்தினார் பள்ளி முதல்வர் உஷா குமாரி மாநில செஸ் அசோசியேசன் துணைத் தலைவர் அனந்தராமன் துணைச் செயலாளர் கண்ணன் பள்ளி துணை முதல்வர் பிரேம சித்ரா உள்பட பலர் இருந்தனர்.
No comments