Breaking News

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி துப்பாக்கி சுடுதலில் அபாரம்.


செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்களின்  திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வழிகளில் மாணவர்களை தயார் படுத்தி  வருகிறது .அந்த வகையில் இப்பள்ளியின் மாணவி யாழிசை என்சிசி முகாம்களில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். பொதுவாக என்சிசி முகாம்களில் பல்வேறு திறன்வளர் பயிற்சிகள் (மலை ஏறுதல்,  பாறையேறுதல் போன்றவை)  அளிக்கப்பட்டு வருகின்றன. 

கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கும். இதுவரை யாழிசை 72 நாட்கள் 7 முகாம்களில் கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். புதுடெல்லியில் என்சிசி ஏற்பாடு செய்திருந்த அகில இந்திய தால் சைனிக் முகாமில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். யாழிசையின் இந்த முயற்சி என்சிசியால் அங்கீகாரம் பெற்றது. யாழிசையின் செயல்பாடுகள் மற்ற என்சிசி மாணவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

இவரது இந்த அபார திறமைகளைப் பாராட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் திரு. SP .குமரேசன் அவர்களும், துணை சேர்மன் திரு.K. அருண்குமார் அவர்களும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பள்ளியின் முதல்வர் திருமதி. உஷா குமாரி, துணை முதல்வர் திருமதி. பிரேம சித்ரா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!