சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
திருவள்ளுர் மாவட்டம் பட்டரைபெருமந்தூர் பகுதியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் முதல்வர் கயல்விழி தலைமையில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு 675 இளங்கலை பட்டதாரிகளுக்கும். 175 முதுகலை பட்டதாரிகளுக்கும் பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்கள் கலந்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர். ஜெ. விஜயலட்சுமி அவர்கள் பட்டங்கள் பெற்ற மாணவ/மாணவியர்களை பாராட்டி வாழ்த்தினார்.
திருவள்ளூர் நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு ஜூலியட் புஷ்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இப்பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்கள், என அனைவரும் கலந்துகொண்டனர்
No comments