Breaking News

நோயும் பேயும் கற்பனை. உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும் - தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் பேட்டி.


நோயும் பேயும் கற்பனை. உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் வரும், குழந்தைகளுக்கு நம் மண்ணுக்கான உணவை வழங்க வேண்டும் தற்காலத்தில் செய்யப்படும் மைதா வைகையில் செய்யப்பட்ட உணவை வழங்குவது தவறாகதான் இருக்கும் மயிலாடுதுறையில் மரச்செக்கு ஆலை மற்றும்’ இயற்கை உணவு பொருள் அங்காடி யை திறந்து வைத்த தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் பேட்டி.



மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் மரச்செக்கு ஆலை மற்றும்’ இயற்கை உணவு பொருள் அங்காடி இன்று துவங்கப்பட்டது. இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவரால் நிறுவப்பட்ட  இந்த ஆலையை தமிழ்நாடு அரசின் விருதுபெற்ற வேளாண் செம்மல் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் செயற்கரிய செய்கின்ற ஒரு செயல் தமிழ் மரபின் தொன்மையாக இருந்தது மீண்டும் மீட்கப்படுகின்ற வகையில் செயற்கு அறிய செயலாக இன்று யாழ் மரச்செக்கு ஆளை மற்றும் இயற்கை உணவு பொருள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்தில் திறக்காமல் நஞ்சில்லாத உணவுப் பொருள்களை வழங்குவதற்காகவே இந்த அங்காடியை திறந்து முன்னுதாரணமாக திகழும் இயற்கை விவசாயி குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 


இன்றைய கால சூழலில் நீரிழிவு நோய் புற்றுநோய் ஆண்பெண் மலட்டுத்தன்மை தோல் நோய்கள் பெருகி வருகிறது. இந்த நோய்களை குணப்படுத்துவதற்காக அரசு மருத்துவ நிபுணத்துவத்தையும் மருத்துவமனையையும் விரிவு படுத்துகிறது. இதனால் தீர்வு கிடைக்காது. உணவுகளால் ஏற்படும் குறைகளை போக்குவதற்கு இயற்கை உணவு பொருள்கள் மருந்தாக உள்ளது. 


உணவில் ஒழுக்கம் இருந்தால் உடலில் ஒழுக்கம் உண்டாகும் அதற்கான மருந்துக்கடை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எந்த உணவை தரக்ககூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் நம் மண்ணில் கிடைக்கும் உணவுகளை உண்டால் பாதிப்பு கிடையாது. நூடுல்ஸ் என்பது தவறான உணவு நமது பாரம்பரிய நூடுல்ஸ் இடியாப்பம் போன்ற நிறைய ரகங்கள் உள்ளது. 


குழந்தைகளுக்கு மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் தரக்கூடாது. அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் தவறாகதான் இருக்கும் என்றும் நம்மரபு சார்ந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இன்றைய நவீன உலகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தவறானது என்றார்.

No comments

Copying is disabled on this page!