மக்களை வதைக்கும் பிளாஸ்டிக் நிறுவனம்; கேட்டால் நான் திமுக சேர்மன் மச்சான், யார் கிட்ட வேணும்னாலும் போய் சொல்லுங்க.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு AS INTERNATIONAL என்ற பெயரில் பிளாஸ்டிக கழிவுகளை உருக்கி மறு சுழற்சி செய்து பாம்பே டெல்லி போன்ற வெளிமாநிலங்களுக்கு நாஷீர் என்பவர் ஏற்றுமதி செய்து வருகிறார், இந்த தொழிற்சாலைக்கு 100 மீட்டர் தொலைவில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள் மேலும் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கும் போது ஏற்படும் துர்நாற்றம் மற்றும் புகை மண்டலத்தினால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா, கேன்சர், மூச்சுத்திணறல் மற்றும் பலவிதமான நோய் தொற்று இதனால் உருவாகும் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.
இது குறித்து யாராகிலும் நாஷீர் என்பவரிடம் கேட்டால், அவர்களிடம் நான் பேரணாம்பட்டு திமுக நகர செயலாளர் நகர துணை சேர்மன் ஆலியார்.ஷூபேர் அஹ்மத் மச்சான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, இது குறித்து நீங்கள் எங்கு சென்றாலும் சொல்லுங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் சென்று நீங்கள் முறையிட்டாலும் என் மாமா துணை சேர்மன் பார்த்துக் கொள்வதாகவும் என்று மிரட்டுவதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கிறார்கள் எனவே மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு துறை இந்தத் தொழிற்சாலைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments