புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செபஸ்டின் செல்வகுமார் வரவேற்றார். ஒட்டப்பிடாரம் ஊ£ராட்சி ஒன்றியத் தலைவர் சேர்மன் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தலைமை வகித்து 168 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வீட்டில் இருந்து நடந்து வரும் மாணவர்களுக்காக விலையில்லா சைக்கிள், காலையில் சாப்பிடாமல் பசியுடன் வந்து கல்வி கற்கும் மாணவர்களின் பசியை போக்க தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, நான் முதல்வன் திட்டம், உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் தவறாமல் தினமும் சைக்கிள் ஓட்ட வேண்டும், இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். அதேபோல், மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளை வகிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் படிக்க வேண்டும். நன்றாக படித்து உயர்ந்த பதவிகளை அடைந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, வர்த்தக அணி முத்துகுமார், காளியப்பன், சிறுபான்மை அணி ஞானதுரை, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து, ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், கிளை செயலாளர்கள் சற்குணபாண்டி, கிருஷ்ணசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments