முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் தற்பொழுது ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாத அவல நிலை கவலையோடு மழையை நம்பி நேரடி நெல் விதைப்பை துவங்கிய விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டம் என்பது டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக உள்ளது கடைமடை பகுதி என்பதால் காவிரி நீரும் பல நேரங்களில் எட்டாக்கனியாகவே விவசாயிகளுக்கு உள்ளது பல ஆண்டுகளாக ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாத நிலையால் தண்ணீர் திறந்தாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டா கனியாகவே உள்ளது மேலும் காவிரி நீர் பல நேரத்தில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக உபரிநீராக திறந்து விடப்பட்டு பயனற்று கடலில் கலக்கிறது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் குறிப்பாக தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் முப்போகம் விளைந்த நிலத்தில் தற்பொழுது ஒருபோகத்தையே நம்பி உள்ளனர் அதுவும் ஆற்றுப் பாசனம் கிடைக்காத நிலையில் வானம் மழை பொழிந்தால் அதனை நம்பியே நெல் விவசாயம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்பொழுது விவசாயிகள் சம்பா சாகுபடி துவங்கியுள்ளனர் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர் சீவக சிந்தாமணி ஆக்கூர் கிள்ளியூர் கீழ்மாத்தூர் தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர் நெல் விதைத்து முளைத்து வளருவதற்கு மழை பொழிய வேண்டி காத்துள்ளனர்.
இந்நிலையில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட திருக்கடையூர் விவசாயி ராமமூர்த்தி கூறும் போது: ஒருபோக சாகுபடியில் ஈடுபடும் தங்களுக்கு அரசு சார்பில் அனைத்து மானியங்களும் முறையாக கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறுவை தொகுப்பு திட்டம் போன்று சம்பா தொகுப்பு திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனவும் உழவு மானியம் விதை மானியம் உரம் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சம்பா நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகள் போதிய மழை வேண்டும் எனவும் மழை இல்லை என்றால் இந்த ஒருபோகமும் என்ன ஆகுமோ என்ற கவலையில் நெல் விதைப்பை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments