திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் 1952 இல் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், 1962 இல் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் ஆனார். அவருக்கு 1954 இல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்விக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் 1962 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை போற்றும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் வெங்கட்டாபுரம் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றுகளையும் கல்வி உபகரண பொருட்களையும் வழங்கி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி ஆசிரியர் தின நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, கவுன்சிலர்கள் ஷியாம் சுந்தர், அசோக், மாவட்ட பிரதிநிதி ஷெரிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments