Breaking News

வாணியம்பாடி புத்துக்கோவிலில் பக்தர்களை நோக்கி வெட்டு, கத்தியுடன், மர்ம நபர் கூச்சலிட்டதால், பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில், அமைந்திருக்கும், பிரபலமான பிரசித்திபெற்ற புத்து மாரியம்மன் கோயில், இக்கோயிலுக்கு தினந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காலை முதல் இரவு வரை, கோவிலில் தரிசனம் பெறுவதற்காக, வந்து செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்று இரவு, மர்ம நபர் ஒருவர், கோவில் உள்ளே சென்று, ஆடு வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு, ஆக்ரோசமாக கூச்சலிட்டுக் கொண்டு, பக்தர்களை அச்சுறுத்தும் வகையில், கூச்சிலிட்டுக் கொண்டு வெளியே வந்ததால், தரிசனம் பெற காத்திருந்த, பக்தர்கள் அலறியடித்து, ஓட்டம் உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் சுதாரித்துக் கொண்டு மர்ம நபரை லாவகமாக பிடித்தனர். 

பின்பு காவலர்கள் விசாரித்தபோது, அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய,வந்துள்ளது பின்பு அவரின் உறவினர்களிடம் அவரை பத்திரமாக, அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர். 

No comments

Copying is disabled on this page!