Breaking News

திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர் அறிக்கை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில்
அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாநில மாணவரணி துணை செயலாளர்கள் அமுதரசன், சேலம். தமிழரசன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் மாணவர் அணி நிர்வாகிகள் நேர்காணல் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர்.சேகர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு. விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர ,பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் 25.09.2024 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள ஜே.வி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவுறுத்தலின்படி, மாநில மாணவரணி துணை செயலாளர்கள் அமுதுரசன், சேலம். தமிழரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தவிருக்கின்றனர்.
நேர்காணல் நிகழ்ச்சியில் கல்லூரி பயிலும் மாணவ ,மாணவிகள் அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், மற்றும் ஐடிஐ உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரி மாணவ ,மாணவியரும் மேலும் கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகளும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். என்றும் படிவங்களை பெற தவறியவர்கள் நேர்காணல் நடைபெறும் நாளன்று திண்டிவனம் ஜே.வி.எஸ். திருமண மண்டபத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

நேர்காணலில் கலந்து கொள்பவர்களின் வயது 30க்குள் இருப்பது சிறந்தது. எனவும் குறிப்பாக நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவண விவரங்கள்.1.நேர்காணலில் கலந்து கொள்பவர்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, மாற்றுச் சான்றிதழ் நகல், 3.பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கான அடையாள அட்டை நகல், 4.ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் என இவ்வாறு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments

Copying is disabled on this page!