உளுந்தூர்பேட்டையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்று கொண்டதை அடுத்து உளுந்தூர்பேட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான வைத்தியநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லையா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் குரு மனோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் குருராஜ், நகர மன்ற கவுன்சிலர்கள் செல்வகுமாரி ரமேஷ்பாபு,மாலதி ராமலிங்கம், மகளிர் தொண்டரணி வலைதள பொறுப்பாளர் ஐஸ்வர்யா பாலாஜி,ரவி,வழக்கறிஞர் ஆனந்த்,இம்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments