சொந்த காசில் சாலையில் உள்ள குழிகளை மூடிவரும் சமூக ஆர்வலர்.
ஈரோட்டில் ஒருவர் தன் சொந்த நிதியில் மணல்களை வாங்கி வந்து சாலையில் ஏற்பட்டிருந்த குழியை மூடி சீரமைத்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆர் கே வி சாலையில் ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், போன்றவை அதிகளவு இயங்கக்கூடிய பிரதான சாலையாகும், இச்சாலையில் கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக அச்சாலையில் இருந்து வருகிறது இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஒருவர் இதுபோன்று வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதால் அவர் தனது சொந்த நிதியில் மணல்களை வாங்கி வந்து சாலையில் ஏற்பட்டிருந்த குழியை மூடி சரி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில் இச்சாலையில் பல நாட்களாக குண்டும் குழியுமாக தான் இருந்து வருகிறது இங்கு அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலை ஆகும் இது போன்ற சாலைகளில் குண்டு குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதுடன் விபத்துக்கு உள்ளாகுவதாகவும் கூறினார்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதை செய்ய முன்வராததால் எனது சொந்த நிதியில் மணல்களை வாங்கி வந்து என்னால் முடிந்த குழிகளை மூடுகிறேன் என்று கூறினார்.
இதுபோன்று குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments