ஆயுஷ்மான் பாரத் இலவச மருந்துவக்காப்பீடு திட்டத்தின் 6-ஆம் ஆண்டு துவக்க விழா முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஆயுஷ்மான் பாரத் இலவச மருந்துவக்காப்பீடு திட்டத்தின் 6-ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டி 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயணத்தை முதலமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆயுஷ்மான் பார்த் இலவச மருந்துவக்காப்பீடு திட்டம் புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதம் 2019 ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டம் புதுச்சேரியில் ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்டுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் புதுச்சேரியில் 6ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கிறது. இந்த 6ஆம் ஆண்டு துவக்கத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் இணைத்து "ஆயுஷ்மான் பார்த் பக்வாரா" என்கின்ற நடை பயணத்தை புதுச்சேரி அரசால் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நடைப்பயணத்தை புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஆனந்தலஷ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
"ஆயுஷ்மான் பாரத் பக்வாரா" 6-வது வருட நடைப்யணத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகளில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்குபெற்று புதுச்சேரி மக்களுக்கு ஆயுஷ்மான் பார்த் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
No comments