Breaking News

பாலக்கோடு‌ அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போதை பழக்கத்திற்க்கு எதிரான மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்   போதை பழக்கத்திற்க்கு எதிரான  விழிப்புணர்வு  நிகழ்ச்சி  கல்லூரி முதல்வர் செல்வராணி அவர்களின்  தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபோதை பழக்கத்திற்க்கு எதிரான மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து  தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது கல்லூரி வளாகத்தில் தொடங்கி, காவல் நிலையம், பேருந்து நிலையம், கடைவீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்து நிறைவு பெற்றது. இப்பேரணியில் வேண்டாம் போதை, போதை பாதையை மாற்றும், போதை வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் கேடு, குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று கோஷமிட்டபடி சென்று போதை பழக்கத்திற்க்கு  எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் அவர்கள் இளைஞர்கள்  போதை பழக்கத்திற்க்க அடிமையாகி தங்களின் வாழ்க்கையை கெடுத்து கொள்வதுடன், மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். மேலும் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு போதை பழக்கமே காரணமாக உள்ளது, இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் போதை இல்லா சமுதாயம் அமைக்க பாடுபட வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்க்கு ஆளாகமாட்டேன், போதை பழக்கத்திற்க்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி போதை இல்லா சமுதாயம் படைப்பேன் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், துணை முதல்வர் ரவி, கல்லூரி பேராசிரியர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் கோகுல், முனிராஜ், மணி கல்லூரி மானவர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!