Breaking News

அரசாணைப்படி பதவி உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்.


அரசாணைப்படி பதவி உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியமேரி தலைமையில்,   5 ஆண்டுகள் பணியாற்றிய  மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கும், அதேபோல் 10 ஆண்டுகள் பணி நிறைவடைந்த  அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அரசு ஆணைப்படி பதவி உயர்வு வழங்காததை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


எனவே தமிழக அரசும் மற்றும் அதிகாரிகளும் உடனடியாக அரசாணைப்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!