Breaking News

கோவில்பட்டி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயம் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.


கோவில்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் - மக்காச்சோளம் செயல் விளக்க திடல் திட்டத்தின் கீழ் 2388 ஹெக்டேர் பரப்பளவிற்கு 2388 பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக 110 பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள், நானோ யூரியா, உயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் மக்காச்சோளம் சாகுபடி முறைகள் குறித்தும், வயலில் உரங்களை எவ்வாறு இடுவது, எந்தெந்த பருவத்தில் எவ்வளவு அளவு இடுவது குறித்தும், நானோ யூரியா, உயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களின் பயன்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

மக்காச்சோள பயிரினை தாக்கும் படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை அலுவலர் காயத்ரி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் மணிராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேவதி, செல்வராஜ், கிடங்கு கண்காணிப்பாளர் வினைதீர்த்தான், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் செல்வராஜ், மாதவி, சிங்கலட்சுமி, லாவண்யா, மலர்விழி மற்றும் மனோபாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!