Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூல சமுத்திரம் கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலின் தேர்களை நிறுத்துவதற்காக இடத்தை இடிப்பதற்காக உயர் நீதிமன்ற உத்தரவு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூல சமுத்திரம் கிராமத்தில் உள்ள விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலின் தேர்களை நிறுத்துவதற்காக அந்த கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கிராம மக்கள் சார்பில் தேர் மண்டபம் மற்றும் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை இடிக்க கோரி தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். 

அவர் அளித்த மனுவின் மீது விசாரணை செய்த உயர்நீதிமன்றம் உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டிடத்தை இடிக்க அரசுக்கு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் தற்போது சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிப்பதற்காக வருவாய் துறை அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி பிரதீப் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் மூலசமுத்திரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். 

ஒருபுறம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இது கிராம மக்களின் மத நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம் என்றும் நத்தம் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் கூறி அதனை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் வாசலில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரே இடத்தில் ஏராளமான பொதுமக்களும் நூற்றுக்கணக்கான போலீசார்ம் திரண்டு உள்ளதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. 

No comments

Copying is disabled on this page!