ஆதிதிருவரங்கம் கோயிலில் உண்டியலில் 28 இலட்சம் ரூபாய் காணிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ஆதிதிருவரங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று காலை நடைபெற்றன. இந்த உண்டியலில் காணிக்கையாக பணமாக வரப்பெற்ற தொகை ரூ.28,86,581 ஆகும்.மேலும் தங்கம் 85 கிராம், வெள்ளி 60 கிராம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த உண்டியல் என்னும் பணியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜன், செயல் அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments