இந்தியா கூட்டணி மாணவர் - இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திப்பு!
26.08.2024 திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் புதுச்சேரி சட்டம் & ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்திய கூட்டணி மாணவர் - இளைஞர் அமைப்புகளின் நிர்வாகிகளை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா சந்தித்தார். புதுச்சேரி பல்கலைகழகத்தில் மாணவர்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்தும் பல்கலைகழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் முரளி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன், விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் தமிழ்வாணன், விடுதலை சிறுத்தைகள் இளைஞர் அமைப்பின் மாநில செயலாளர் இளங்கோவன், இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில தலைவர் கௌசிகன், மாநில செயலாளர் சஞ்சைசேகரன் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments