காரைக்கால் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக அறிவித்து மத்திய அரசிடம் இருந்து சிறப்புக்கு கூறு நிதியை பெற வேண்டும் - மமுக தலைவர்.
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவரும் முன்னாள் புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராமதாஸ் இன்று காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் "புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்துடன் புதுச்சேரி அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பாக அரசு வருவாய் எப்படி பெருக்க வேண்டும் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருப்பதாகவும், புதுச்சேரி அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது காரைக்கால் மாவட்டத்திற்கு என (காரைக்கால் நிதிநிலை அறிக்கை) தனி ஒரு இணைப்பை வெளியிட வேண்டும் எனவும் ஏனென்றால் காரைக்கால் மாவட்டம் பதினாறு சதவீத மக்கள் தொகையும் 32 சதவீத நிலப்பரப்பும் கொண்டுள்ளதால் இது காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல காரைக்கால் மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டமாக அறிவித்து மத்திய அரசின் சிறப்பு கூறு நிதியைப் பெற்று மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழி வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் காரைக்கால் வளர்ச்சிக் என தனி ஒரு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதுபோலவே தலைமைச் செயலாளர்களுக்கு அடுத்தப்படியான பதவியில் உள்ள ஒரு அதிகாரியையும் நியமிக்க வேண்டும் எனவும் அப்படி இருந்தால் காரைக்காலில் வளர்ச்சி குறித்த முடிவுகளை காரைக்காலிலேயே எடுக்க உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments