Breaking News

மயிலாடுதுறை அருகே வெடி விபத்து ; ஒருவர் பலி, 3


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்து திருவலங்காடு பகுதியில் திருமண நிகழ்வுக்கு விழாக்களுக்கு தயார் செய்யும் சிறிய அளவிலான வெடி தயார் செய்யும் கிடங்கு மற்றும் தொழிற்சாலை பயங்கர தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு. மூன்று பேர் படுகாயம். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு மாதா கோயில் மெயின் ரோடு ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் இன்று நண்பகல் வெடி விபத்து ஏற்பட்டது. வழக்கம்போல் நான்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். திடீரென்று இன்று நண்பகல் ஒரு மணி அளவில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 


இந்த விபத்தில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவாவடுதுறையை சேர்ந்த கர்ணன் என்பவர் உடல் சிதைந்து உயிரிழந்தார். மேலும் கலியபெருமாள் குமார் லட்சுமணன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குத்தாலம் தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் தற்போது நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

No comments

Copying is disabled on this page!