பூம்புகார் தொகுதி எம்எல்ஏ திருமண நாள்; கோவிலில் வழிபாடு அன்னதானம் வழங்கல்: திமுக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இன்று திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் திருமண நாளை ஒட்டி மனைவி மற்றும் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினார் கோவில் நிர்வாகம் திமுக நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மனைவியுடன் திருமண நாளை ஒட்டி கோவிலில் அன்னதானம் வழங்கினார்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் அவர் மனைவிக்கு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments