Breaking News

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் காப்பீட்டு திட்டத்தில் மனுக்கொடுத்த சிறிது நேரத்தில் 2 பேருக்கு தலா 5 லட்சத்திற்கு காப்பீட்டு.


சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் காப்பீட்டு திட்டத்தில் மனு கொடுத்த சிறிது நேரத்தில் 2 பேருக்கு தலா 5 லட்சத்திற்கு காப்பீட்டு  திட்டத்திற்கான ஆணை வழங்கப்பட்டது.


மேலும் சிலருக்கு உடனடி பட்டாக்களையும் கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோர் வழங்கினர். மூன்றுசக்கர வண்டிகேட்டு மனு கொடுக்க வந்த நபரிடம் மேடைக்கு வர முயற்சி செய்வதை பார்த்த கோட்டாட்சியர் பால்துரை தாசில்தார் மாணிக்கவாசகம் இருவரும் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து மனுவைப் பெற்றுக் கொண்டார்கள் விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். 


மேலும் இம்முகாமில் கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமு கனக கருப்பையா வெளியாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நா  பெருமாள் மேல பட்டமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் சி.சந்திரன் கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரமிளா கார்த்திகேயன் என் மேலையூர்  ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா சோமன் என் கீழையூர் மாணிக்கம் செவரகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி கம்பனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன் மற்றும் ஊர்  பொது மக்கள் கலந்து கொண்டனர் 

No comments

Copying is disabled on this page!