மின் கட்டண உயர்வை கண்டித்து மின் வாரிய அதிகாரி முற்றுகை.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையும் 50க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர் மின்துறை தலைமை அதிகாரியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி,சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 50கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினர், மின் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை மானியமாக வழங்க அரசு முன்வர வேண்டும், இல்லையென்றால் மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments