உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா நீதிபதி ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் தண்டுபத்தில் உள்ள அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் மீனா தலைமை வகித்து வரவேற்று பேசினார். ஆலோசகர் ஆழ்வார், நிர்வாக அதிகாரி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை முதன்மை நீதிமன்ற நடுவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பால கணேசன், துணை தலைவர் முத்துலட்சுமி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் தாலுகா நிருபர் பெ.முகேஷ்
No comments