Breaking News

ஆசிரியர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் பேச்சு.


மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில்  ஆசிரியர் தின விழா  வேலாயுதம் அரங்கில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். 


சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன் கலந்து கொண்டு 25 ஆண்டு காலம் கல்விப் பணியில் சிறப்பாக செயலாற்றிய  வேதியல் துறை பேராசிரியர் பி. அன்பசீனிவாசன், இயற்பியல் துறை பேராசிரியர் டி.பிரபு, தாவரவியல் துறை பேராசிரியர் நாகராஜன், பொருளாதாரத்துறை பேராசிரியை வனிதா, துணை நூலகர் ராமலிங்கம் உள்ளிட்டவர்களுக்கும். சிறந்த ஆய்வு இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வெளியிட்ட பேராசிரியர்களுக்கும்  பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.


மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள கல்வியை மட்டும் போதிக்காமல்  நல்லொழுக்கம் மனித மாண்புகளை கற்றுக் கொடுத்து நல்ல குடிமகன்களாக மாற்றுபவர்கள் தான் ஆசிரியர்கள். பெற்றோர்கள் கண்டிக்கும் பொழுது தாங்கிக் கொள்ளும் நீங்கள் ஆசிரியர்கள் கண்டிக்கும் பொழுதும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது உங்களை நல்வழிப்படுத்துவதற்காக தான். 


ஆசிரியர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் தன்னலமில்லாமல் தங்களிடம் படிக்கும் மாணவர்களின் நலத்தற்காக அக்கறையுடன் செயல்பட்டு அறப்பணி மேற்கொள்பவர்கள் தான்  ஆசிரியர்கள் மாணவர்களாகிய உங்களுக்கு படிப்பைக் காட்டிலும் நல்லொழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று என பேசினார்.


இதில் தேர்வு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், துணை முதல்வர் எம் மதிவாணன், ஏவிசி பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர்கள் எம்.செந்தில் முருகன், ஏ.வளவன், ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.கண்ணன் மற்றும் பேராசிரியர்கள்  பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!