கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சு போட்டி.
காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சு போட்டி 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு. காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கு இடையே பேச்சு போட்டி நடைபெற்றது.
மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது ரிபாஸ் முன்னிலையிலும் மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான A.M.H.நாஜிம்,நிரவி திருபட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேச்சு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று 10 தலைப்புகளில் உரையாற்றினார். நடுவர்களாக நாஞ்சில் சம்பத், குத்தாலம் அன்பழகன், தமிழ் காமராசன் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஹாரிஸ் பிரபு, வெற்றி, சுரேஷ், ரூபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments