புதுச்சேரி ஆயுஷ் சித்தா மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் திருமுருகன் துவங்கி வைத்தார்.
காரைக்காலில் நகராட்சி திருமண மண்டபத்தில் ஆயுஷ் மருத்துவ பிரிவின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் இயக்குனர் ஶ்ரீதர், நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இம்மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனை மருத்துவ ஆலோசனை, மருத்துவ சிகிச்சை, யோகா சிகிச்சை, ஆயுஷ் சிகிச்சை, ஹோமியோபதி சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சைகள் பெற்றனர். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற நோயாளிகள் ஆர்வமுடன் உடல் பரிசோதனை, ஆலோசனை, சிகிச்சைகள் பெற்றனர்.
ஆயுஷ் மருத்துவ பிரிவின் சார்பில் நடந்த இம்முகாமில் அனைவருக்கும் சத்துமாவினால் செய்யப்பட்ட உருண்டைகள் உணவு வகைகள் பழரச வகைகள் மற்றும் மூலிகை உணவு வகைகளை இலவசமாக வழங்கப்பட்டன.
No comments