சீர்காழியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.
சீர்காழியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுவதால் பரபரப்பு. வான ஓட்டிகள் மகிழ்ச்சி .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன் வீதி பள்ளிவாசல் பகுதியில் இருந்து சட்டநாதபுரம் வரையிலும் 7 மீட்டராக உள்ள தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்பணியின் ஒரு பகுதியாக எருக்கூர் ரவுண்டானவிலிருந்து விளந்திடசமுத்திரம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மீதம் நகரில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ஏதுவாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. சீர்காழி நகரில் உள்ள கொள்ளிடம் முக்கூட்டு, கடை வீதி, மணி கூண்டு, அரசு மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை, தென்பாதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி சர்வேயர் மற்றும் மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகரில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
No comments